தென்னை மரமானது வெப்பம் மிகுந்த நாடுகளில் ஒரு பயிர் மரமாக அதிகம் வளர்க்கப்படுகிறது.
நம் சமையல்களில் பயன்படுத்தும் தேங்காயானது இந்த தென்னை மரங்களில் இருந்து தான் கிடைக்கின்றன. தென்னை மரங்களில் தேங்காய் காயாக இருக்கும் போது இளநீர்
எனப்படுகிறது.
இளநீரானது இயற்கையானது நமக்கு தென்னைமரங்களில் இருந்து அளிக்கும் சிறந்த வரப்பிரசாதமாகும்.
இளநீரை பருகுவதன் மூலம் மருத்துவ ரீதியாக பல நன்மைகள் ஏற்படும்.
இளநீரானது சோரியாசிஸ் போன்ற தோல் சம்மந்தப்பட்ட நோய்களை நன்கு தடுத்து சரும வியாதிகளில் இருந்து உடலினைக் காக்கிறது. உடலில் ஏற்படும் நச்சுக்கள் அனைத்தையும் வியர்வை வழியாக வெளியேற்றி உடலினை நச்சுத்த தன்மையில் இருந்து காக்கிறது.
உடலில் எலெக்ட்ரோலைட்ஸ் உப்பினை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சுறுசுறுப்பினையும் அளிக்கிறது.
உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியினையும் அளிக்கிறது.
நம் உடலுக்குத் தேவையான நல்ல கொலெஸ்டிரோலினை இளநீரானது ஊக்குவிக்கிறது.
மேலும் அதிகளவில் இளநீரை பருகுபவர்கள் ஹைப்பர்டென்ஷன் என்னும் மன அழுத்தம் வராமல் பாதுகாக்கப்படுகின்றனர்.
இளநீரை அருந்துவதால் மலச் சிக்கல், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றில் இருந்து நம் உடலைக் காக்கிறது.
அது மட்டுமில்லாமல் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை இளநீருக்கு உண்டு.
இளநீரில் கிருமி நாசினித் தன்மை அதிகம் உள்ளது. இளநீரில் இருக்கும் ஆசிட் தன்மையானது முகத்தில் இருக்கும் பருக்களை தடுக்கும் தன்மை கொண்டது.
இவ்வாறு இளநீர் அருந்துவதன் மூலம் நம் உடலானது பல நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகிறது.
The coconut tree is widely grown as a crop tree in hot countries.
The coconut we use in our cooking comes from these coconut trees. When the coconut is a …
Read More