News Archive

கீரை ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் புட் ஆகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் இதில் போதுமான அளவில் காணப்படுகின்றன, மேலும் இது மிகக் குறைந்த கலோரிகளையும் கொண்டுள்ளது. கீரை இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது. ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், கீரையை சாப்பிடுவது சருமத்தில் இறுக்கத்தை ஏற்படுத்தி சுருக்கங்களைத் தடுக்கிறது.

பெண்கள் முகத்தின் இயற்கையான அழகையும் பளபளப்பினையும் அதிகரிக்க விரும்பினால், அவர்கள் தொடர்ந்து கீரை சாற்றை உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். வைட்டமின் A போதுமான அளவு உட்கொள்வது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, கீரையில் இருக்கும் போலேட் மற்றும் பைபர் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. கீரையின் சூழலில் ஒரு சிறப்பு விஷயம் என்னவென்றால், அதில் ஆற்றலை அதிகரிக்கும் நைட்ரேட் உள்ளது, இது தசைகளை பலப்படுத்துகிறது.

உயிரணுக்களின் சீரான செயல்பாட்டிற்கு நைட்ரேட் உதவியாக இருக்கிறது. இது கல்லீரல் மற்றும் பெருங்குடல் (பெரிய குடல்) ஆகியவற்றிலிருந்து நச்சுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது. கூடுதலாக, குளோரோபில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே குளிர் காலங்களில் கீரையினை அதிக அளவு உட்கொள்ளுதல் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என தெரிகிறது.

குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்து.. கீரையில் பொட்டாசியம் போதுமான அளவில் காணப்படுகிறது மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கீரை உதவியாக இருக்கும். கீரையின் நுகர்வு எலும்புகளையும் பலப்படுத்துகிறது. கீரை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும், மேலும் ஆயுர்வேதத்தின்படி, மருத்துவ குணங்களும் இதில் ஏராளமாக காணப்படுகின்றன.

Ramya, Mylapore

 

Spinach is a superfood that is rich in nutrients for health. It contains sufficient amounts of vitamins, minerals, and phytonutrients, and it is also very low in calories. Spinach eliminates …

Read More

வரகு உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளை தடுக்கும். கொண்டைக்கடலை பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. சோயாபீன்ஸ் இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக புரதம், நார்ச்சத்து உள்ளது. உறுதியான எலும்புகளை உருவாக்கி உடலை வலுவாக்கும். மெனோபாஸ் பிரச்சினைகளை தடுக்கும். உடம்பில் கொழுப்பின் அளவை குறைத்து ரத்த குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பச்சை பயறு, முளைகட்டிய பயிறு உடல் எடையை குறைக்கும். நோயாளிகளுக்கும் உகந்தது. உளுந்து ஆண்மையைப் பெருக்கும். பெண்கள் இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும்.

தட்டைப்பயறு உடலில் புதிய செல்களை உருவாக்க தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் பருமனாகாமல் இருக்க உதவுகிறது. கொள்ளுவுக்கு கொழுப்பை கரைப்பதில் முதல் இடம் உண்டு. உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை எடுத்துவிடும். ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். வளரும் குழந்தைகள், உடற்பயிற்சி செய்வோருக்கு மிகவும் உகந்தது.

மூலநோய்க்கும், ரூமாட்டிசம் பிரச்சினைகளுக்கும், காய்ச்சலைக் கட்டுபடுத்த, இருமல் மற்றும் சளியை விரட்ட என கொள்ளுவின் குணமாக்கும் பட்டியல் நீள்கிறது. வயிற்றுப்புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்கு கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.

உடலுக்கு சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனி இடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம். சோளம் உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனை குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

Arnold, California

Varagu reduces body weight. Prevents menstrual disorders. Chickpeas protect against stroke. Soybeans play an important role in heart and liver functions. Contains high protein and fiber. Builds strong bones and …

Read More

தமிழகத்தின் வரலாறு மிகவும் பெருமைக்குரியது. இது பல சிறப்புகள் மற்றும் வீர கதைகளால் நிறைந்துள்ளது. தமிழர்கள், உலகின் பழமையான மக்களிலொன்றாகவும், அவர்களின் கலாச்சாரம், மொழி, இலக்கியம், மற்றும் அரசியல் வளர்ச்சிகளால் தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளனர்.

பழங்கால தமிழ் அரசு முறை

தமிழர் மண்ணில் மூன்று முக்கிய அரசுகள் நிலவின. அவை:

  1. சோழர்

  2. பாண்டியர்

  3. சேரர்

இவர்கள் தமிழகத்தையே ஆட்சி செய்து, தங்கள் இராச்சியங்களை விரிவுபடுத்தினர்.

சோழர்கள் (Chola Dynasty)

சோழர்கள் கடல் வணிகத்திலும், கட்டிடக்கலை மற்றும் நீர்ப்பாசனத்திலும் சிறந்து விளங்கினர். ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் கடல் பரப்புகளையும் தாண்டி தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். பெருஞ்சோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் இன்று உலகப் புகழ் பெற்றது.

பாண்டியர்கள் (Pandya Dynasty)

பாண்டியர்கள் கல்வி, இலக்கியம், மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். மதுரை தமிழரின் அறிவு மையமாக விளங்கியது. சங்க காலம் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்ட முக்கியமான காலமாகும்.

சேரர்கள் (Chera Dynasty)

சேரர்கள் முதன்மையாக கேரளா பகுதியில் ஆண்ட அரசர்கள். இவர்கள் கடலோர வணிகத்தில் முக்கிய பங்கு வகித்தனர். துறைமுகங்கள் மூலமாக சீனா, ரோமா நாடுகளுடன் வணிகம் செய்தனர்.

தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம்

தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே இலக்கியத்தில் சிறந்து விளங்கினர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், மற்றும் வாழ்க்கை முறைகளை விளக்குகின்றன.

நோக்குக்காட்டி

தமிழர்கள் தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலால் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்கள் மொழி, கலாச்சாரம், மற்றும் வீரத்தன்மை இன்று வரை வாழும் உதாரணமாக இருந்து வருகின்றது. வரலாற்றை புரிந்து கொள்ளுவதே நாம் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் முக்கிய வழியாகும்.

The history of Tamil Nadu is very proud. It is full of many special and heroic stories. Tamils, as one of the oldest peoples in the world, have a unique …

Read More

எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும். எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும்.

எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும். எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும். 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இது ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாக விளையும் தாவரமாகும். எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு. கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது. எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும். இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழ் வைத்தியத்தில் நல்லெண்ணெய் பெரும்பங்கு வகித்து வருகிறது.

நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம். இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர். எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும். சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும். 

பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.

Sesame seeds are rich in magnesium, which helps in reducing blood pressure. Sesame seeds are ground and applied to the skin to relieve rashes, scabies, and ulcers, and they gradually …

Read More

தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்வதற்கும் துணைபுரியும். உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது ரத்த சோகைக்கு காரணமாகிறது. வெல்லத்தில் இந்த இரண்டு சத்துக்களும் இருக்கிறது. வெல்லத்தில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகளும் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம். அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தை சுமுகமாக எதிர்கொள்ள துணைபுரியும். 10 கிராம் வெல்லத்தில் 16 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான மெக்னீசியம் அளவில் நான்கு சதவீதமாகும். மெக்னீசியம் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும். வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். வெல்லத்தில் கலந்திருக்கும் சோடியம் மூலக்கூறுகள் பொட்டாசியத்துடன் கலந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். வெல்லம் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் சுவாசக்குழாய், உணவுக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும், சுவாசத்திற்கும் துணைபுரிகிறது.

Eating a small amount of jaggery every day is good for the skin. It also helps in keeping the skin soft. Deficiency of folic acid and iron in the body …

Read More