ஆன்மீகக் கல்வி என்றால் என்ன?
ஆன்மிகம் என்பது ஒருவித கல்வி. ஆன்மீகம் என்றாலே துறவறம் என்ற நினைப்பு மாற வேண்டும். உலகில் தோன்றிய நமக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்னும் உண்மை நிலையை உணர்த்துவதே ஆன்மீகம். ஆன்மீகத்தைக் கற்றுத் தரும் கல்வியே ஆன்மீகக் கல்வியாகும்.
நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை
நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்காக வலியுறுத்தும் கல்வி ஆன்மீகம். உலகத்தில் முன்னேறவேண்டும் எனில் உண்மையான நேர்மையான பாதையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த கலியுகத்தில் நற்பண்புகள் குறைந்து கொண்டு வருகிறது.
உயிர்ப்பு வாழ்க்கை
உயிரற்ற வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நற்குணம், நற்பண்புகள் நிறைந்து வாழும் வாழ்க்கை உயிர்ப்பு வாழ்க்கை.
பௌதிகப் பொருட்களும் ஆன்மீகக் கல்வி
பௌதிகப் பொருட்களில் இருந்து நாம் விடுபட்டு இறையடி நாடுவதைப் பற்றி கற்கும் கல்வியே ஆன்மீகக் கல்வி. பொருள் ஈட்டுவதன் மூலமோ அல்லது கல்வி கற்றவனாக இருப்பதன் மூலமோ நாம் சிறந்த மனிதனாக திகழ முடியாது.
மனிதத் தன்மை
மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு ஆன்மீகக் கல்வி உதவி புரிகிறது. வாழ்கைக்குத் தேவையான விஷயம் நற்பண்புகள்.
ஆன்மீகக் கல்வி
அழிவற்ற உயிர் சக்தியை உணர்ந்து நம்முள் இருக்கும் நற்பண்புகளை மேலும் மேலும் ஊக்குவித்து, வெளிக்கொண்டுவரும் கல்வியே ஆன்மீகக் கல்வியாகும்.
தியானம்
ஆன்மீக தன்மையை நாம் வெளிக்கொண்டு வருவதற்கு தியானம் மிகவும் அவசியம். தியானத்தை அமைதியாக செய்வதற்கு தனிமையான ஒரு சூழல் உதவி புரியும்.