மோதிரம் அணியும் கலாச்சாரமும் அதன் பயன்களும்
பண்பாடு, பழக்க வழக்கம், ஆரோக்கியம், அதிர்ஷ்டம் போன்ற காரணங்களுக்காக மோதிரத்தை அணியும் பாரம்பரியம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
நாம் எதற்காக மோதிரம் அணிகிறோம் என்பதை நாம் உணர்ந்து அணிவதன் மூலம் அதன் பலனை அடையலாம்.
மோதிரத்தை எந்தெந்த விரல்களில் அணிய வேண்டுமோ அந்தந்த விரல்களில் மட்டுமே அணிய வேண்டும்.
மோதிரம் அணிவதன் மூலம் உடலில் உள்ள ஆற்றலும் சக்தியும் அதிகரிக்கக் கூடும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இடது கை மன ரீதியான நன்மைகளையும், வலது கை உடல் ரீதியான நன்மைகளையும் அளிக்கும் என்று பண்டைக் காலம் முதல் நம் முன்னோர்கள் நம்பி வருகின்றனர்.
கைகளில் உள்ள ஒவ்வொரு விரல்களுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கின்றன. அதன் மகத்துவத்தை அறிந்து மோதிரத்தை அணிவது பலனை அளிக்கும்.
ஒவ்வொரு கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் மோதிரம் அணியும் கையானது மாறுபடும்.
கட்டை விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:
*ஆரோக்கியம் மேம்படும்.
*ஆற்றல் புதுப்பிக்கப்படும்.
ஆள் காட்டி விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:
*ஆளுமை அதிகரிக்கும்.
*சுயமரியாதை கூடும்.
*தன்னம்பிக்கை வளரும்.
*பணியில் உயர்வு கிடைக்கும்.
*சிறந்த எதிர்காலம் அமையும்.
நடு விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:
*குடும்ப வாழ்க்கை சிறந்து விளங்கும்.
*பிறரை ஈர்க்கும் தன்மை அதிகரிக்கும்.
மோதிர விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:
*செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
* பணப் புழக்கம் அதிகரிக்கும்.
சுண்டு விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:
*உள்ளுணர்வு அதிகரிக்கும்.
*புரிந்துணரும் தன்மை அதிகரிக்கும்.
*ஹோர்மோன் சமநிலை உண்டாகும்.
இவ்வாறு பல பயன்களையும் மனதில் கொண்டு தான் இந்த மோதிரம் போடும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
Click a star to rate this article (1-5).
← Back to Archive