வல்லவராய் வாழ வைக்கும் வல்லாரைக் கீரை!!

Centella asiatica has the power that makes you live like a warrior!!

மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்த கீரையாக வல்லாரை விளங்குகிறது.

வியப்பூட்டும் வகையில் வாய்ப்புண்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது வல்லாரைக் கீரை. ஞாபகசக்தியை அதிகரித்து மூளையை நன்கு சுறுசுறுப்பாக இயக்க வல்லது இந்த வல்லாரைக் கீரை. அதுமட்டுமல்ல பலவித நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை 

வல்லாரைக்கு உள்ளது. இரும்புச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சியுடன் தாது உப்புக்களும் இதில் நிறைந்துள்ளன. அது மட்டுமல்ல சுண்ணாம்புச் சத்தும் இதில் அடங்கியுள்ளது.

வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் வல்லமை படைத்தது வல்லாரைப் பொடி. அதோடு மட்டுமில்லாமல் வயிற்றுப புண், குடல் புண் போன்றவற்றையும் எளிதில் குணப்படுத்தும் தன்மை இந்த வல்லாரைக்கு உள்ளது. உடல் சோர்வினைக் குணப்படுத்த உகந்த கீரை.

காய்ச்சல், சளித்தொல்லை, தொண்டைக்கட்டினைப் போக்க வல்லது இந்த வல்லாரைக் கீரை. உடல் எறிவுத்தன்மைகளையும் குறைக்கும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப் போக்கினைத் தடுக்கவும் பயன்படுகிறது.

மூட்டு வலி, வீக்கங்கள் போன்றவற்றையும் குணமாக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு.

இவ்வாறு வல்லாரையின் வலிய நோய் எதிர்ப்பு சக்திகளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.


Tags: Centella asiatica, gotu kola, vallari

Average Rating: 0/5 (0 votes)

Click a star to rate this article (1-5).


← Back to Archive