தேனீக்களும், அறிவியலும்

ஐந்தறிவு படைத்த தேனீக்களும் அறிவியல் நன்கு தெரிந்த அறிவாளிகளே!
ஒவ்வொரு பூக்களாகச் சென்று தேனைச் சேமிக்கும் தன்மை கொண்டவை தேனீக்கள்.
தேனீக்கள் மிகவும் புத்திசாலித்தனம் மிக்க பூச்சிகள்.
தேனீக்களின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்குகளைக்கூட அதனால் உணர முடியும் குணாதிசயம் கொண்டது.
அதீ நவீன முறையில் தொடர்பு கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது தேனீக்கள்.
மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருக்கும் தேனீக்கள் தங்களுக்குள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருக்கும்.
உணவினை எடுக்கச் சென்ற தேனீயானது மறுபடியும் தன்னுடைய கூட்டிற்கு வந்தடைய மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருக்கும் தேனீக்களை பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறது.
உணவு எங்குள்ளது என்ற தகவல்களையும் தங்களுக்குள் தொடர்பு கொண்டு பரிமாறிக்கொள்கின்றன.
அது மட்டுமல்ல மேலும் கீழும் ஆடும் தேனீக்களானது தங்களுடைய ஆட்டத்தினை வைத்து சூரியனை நோக்கிப் பறக்கிறதா அல்லது தள்ளிப் பறக்கிறதா அல்லது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறது.
அத்துடன் பூமியினுடைய சுழற்சியைக் கொண்டும் மின் காந்த அலைகளைக் கணக்கிட்டும் சரியான இடத்தினையும் தேனீக்களால் ஞாபகப்படுத்திக் குறிப்பிட முடியும்.
இவ்வாறு தேனீக்களும் அறிவியல் அறிந்த அறிவாளிகளே!!!
Click a star to rate this article (1-5).
← Back to Archive