சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த பொருட்கள்:

No Image Available

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த பொருட்கள்:
மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். அவருடைய அருளை பெறுவதற்கு அவருக்கு உகந்த பொருட்களை கொண்டு பூஜித்து வந்தால் பலன் கிட்டும். ஆக்கல், அழித்தல், பாதுகாத்தல் போன்ற தங்கள் கடமைகளை திறம்படச் செய்யும் மும்மூர்த்திகளில் அழித்தல் தொழிலை செய்பவர் நம் சிவபெருமான். தீயவற்றை அழிப்பதே அவர் கடமை.

சிவபெருமானின் அன்பையும், அருளையும் பெற்றுத் தருவதற்கு உகந்த பொருட்கள்:

குங்குமப் பூ: சிவபெருமானின் நாட்டமிகு பொருட்களில் ஒன்று குங்குமப் பூ.  இந்த குங்கும பூக்கொண்டு சிவனை வழிபட்டால் அதிர்ஷ்டமும் செல்வமும் செழிக்கும் என்பது ஐதீகம்.

பசுநெய்: சிவனுக்கு தூய நெய்யில் அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். வெற்றியும், வலிமையையும் வேண்டுமெனில் இந்த பசும்நெய் கொண்டு சிவனை பூஜிக்கவும்.

சர்க்கரை: ருத்ர பூஜையின் போதும், சிவ ராத்திரி பூஜையின் போதும் சர்க்கரை வைத்து வழிபட்டால் உங்கள் வாழ்வில் வறுமை விட்டு விலகும்.

பன்னீர்: பன்னீர் கொண்டு சிவனை வழிபடுவதன் மூலமோ அல்லது அபிஷேகம் செய்வதன் மூலமோ சிவனை குளிர்மைப் படுத்தலாம். இதனால் பக்தர்கள் தங்கள் இலட்சிய இலக்குகளில் கவனம் செலுத்தி அதனை அடையவும் முடிகிறது.

தயிர்: தயிர் கொண்டு சிவனை பூஜிக்கும் போது அமைதியையும், பொறுப்பையும் அளிப்பதோடு தீயவற்றைப் போக்கவும் செய்வார் சிவன்.


Tags: cow's ghee, rose water, saffron, sugar, yogurt

Average Rating: 0/5 (0 votes)

Click a star to rate this article (1-5).


← Back to Archive